- Home
- Gallery
- குழந்தை பிறந்ததும் எக்கச்சக்க வெயிட் போட்டு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அமலா பால்! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
குழந்தை பிறந்ததும் எக்கச்சக்க வெயிட் போட்டு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அமலா பால்! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
நடிகை அமலாபால், குழந்தை பிறந்த பின்னர் எக்கச்சக்கமாக வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும், ரீசென்ட் புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

'சிந்து சமவெளி' திரைப்படத்தின் மூலம் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஆளான நடிகை அமலாபால், முதல் படத்திலேயே சொந்த ஊருக்கு மூட்டையை கட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்த மைனா திரைப்படம், அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நெகட்டிவ் விமர்சனங்களை மறக்கடிக்கும் வகையில், இந்த படத்தால் பாசிடிவ் விமர்சனங்களை அள்ளிய நடிகை அமலா பால், பின்னர் விஜய், தனுஷ், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்தார்.
குடிப்பழக்கம் இல்லாத மற்றும் குடியில் இருந்து மீண்ட 6 முன்னணி பிரபலங்கள்! யார் யார் தெரியுமா!
லைம் லைட்டில் இருக்கும்போதே, தன்னை வைத்து 'தெய்வத்திருமகள்', 'தலைவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க துவங்கிய அமலாபால், தன்னுடைய குடும்ப வழக்கப்படி கிறிஸ்தவ முறையிலும், ஏ.எல்.விஜய்யின் குடும்ப வழக்கப்படி இந்து முறையிலும் திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை, மீண்டும் நடிகை அமலாபாலுக்கு சினிமா மீது ஏற்பட்ட ஆசையால் 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவரும் ஒருமனதாக விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளில் கவனம் செலுத்த துவங்கிய அமலா பால் ஏனோ ஒரு கட்டத்தில் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறினார். ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர், இவர் மலையாளத்தில் பிரித்திவிராஜ்க்கு ஜோடியாக நடித்த ஆடி ஜீவிதம் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி!
மேலும் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பாலுக்கு, கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த குழந்தைக்கு இலை என அமலா பால் பெயரிட்டுள்ள நிலையில், அவ்வபோது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் சில புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
குழந்தை பிறந்த பின்னர் கூடுதலாக வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ள அமலா பால், நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட ஹார்ட் போட்டோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. என்ன அமலா பால் இப்படி மாறிட்டீங்க? என நெட்டிசன்கள் பலர் இவரைப் பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.