50 வயசில்.. 20 வயசு பெண் போல் போட்டோ ஷாப் செய்து போட்டோ போஸ்ட் செய்த ஐஸ்வர்யா ராய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நடிகை ஐஸ்வர்யா ராய், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை, ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் செய்து போஸ்ட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய், அக்டோபர் 4 ஆம் தேதி இரவு மும்பையில் நடந்த லோரியல் நிகழ்வில் கருப்பு நிற சல்வாரில் ரசிகர்களை மயக்கும் அழகில்... சிவப்பு கம்பளத்தில் நடை போட்டர். அப்போது எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் சிலவற்றை, அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், ஐஸ்வர்யா ராய் பாரிஸ் பேஷன் வீக்கில் தங்க நிற கவுன் அணிந்து மேடையை அலங்கரித்த புகைப்படங்கள் வெளியாகி, வைரலாகபார்க்கப்பட்டது . இதை தொடர்ந்து, அக்டோபர் 4 ஆம் தேதி, ஐஸ்வர்யா ராய், மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த, லோரியல் நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மட்டும் இன்றி, பாலிவுட் திரையுலகில் பிரபலமான அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த், கௌஹர் கான் மற்றும் பாத்திமா சனா ஷேக் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தனர்.
இந்த நிகழ்வில் ஐஸ்வர்யா ராய், மிகவும் எலகண்டான கருப்பு நிற கவுனில்... தன்னுடைய பிரகாசமான அழகால் அந்த நிகழ்ச்சியை அலங்கரித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதே நேரம் சிலர் போட்டோ ஷூட் செய்து ஐஸ்வர்யா ராய் போஸ்ட் செய்துள்ளதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதே போல் அவர் அந்த பேஷன் நிகழ்ச்சியில் நேரடியாக எடுத்த சில புகைப்படங்களில் கொஞ்சம் குண்டாக இருப்பதோடு, வேறு மாதிரி இருக்கிறார். இதை ஒப்பிட்டு தான் ஐஸ்வர்யா ராய் என்று கூட பார்க்காமல் ஓட்டி வருகிறார்கள்.