- Home
- Gallery
- Actress Aditi : சோனாக்ஷிக்கு கல்யாணம்.. மணமகள் & கணவரோடு இணைந்து குத்து டான்ஸ்.. கலக்கிய அதிதி - வைரல் பிக்ஸ்!
Actress Aditi : சோனாக்ஷிக்கு கல்யாணம்.. மணமகள் & கணவரோடு இணைந்து குத்து டான்ஸ்.. கலக்கிய அதிதி - வைரல் பிக்ஸ்!
Actress Aditi Rao Hydari : பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவிற்கு நேற்று ஜூன் 23ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், பல்வேறு பிரபலங்களும் அதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

sonakshi
கடந்த 2014ம் ஆண்டு, பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "லிங்கா" திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை தான் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் உலகில் பிரபல நடிகையான சோனாக்ஷி, அந்த ஒரு தமிழ் படத்தை தவிர, பிற மொழிகளில் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
siddharth
37 வயதாகும் சோனாக்ஷி, நேற்று ஜூன் 23ஆம் தேதி ஜாகிர் இக்பால் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் அண்மையில் தங்களுடைய திருமணம் குறித்து அறிவித்த சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரியும் கலந்து கொண்டனர்.
aditi rao
அதிதி மற்றும் சோனாக்ஷி ஆகிய இருவரும் இணைந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அவர்கள் அண்மையில் இணைந்து நடித்த "ஹீரமண்டி" என்ற திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
aditi rao hydari
இந்நிலையில் மணமகள் சோனாக்ஷி மற்றும் தனது கணவர் சித்தார்த் ஆகிய இருவரோடும் இணைந்து, கல்யாண விருந்தில், அதிதி நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். அது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.