வெளில தான் ராக்கி பாய்.. வீட்டில் எப்போவுமே கியூட் கணவர் தான் - மனைவியோடு வரலக்ஷ்மி விரதம் கொண்டாடிய யாஷ்!
Actor Yash : தனது கணவர் நடிகர் யாஷுடன் இணைந்து வரலட்சுமி விரதம் கொண்டாடிய அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவருடைய மனைவி ராதிகா பண்டிட்.
Radhika
கர்நாடகாவில் பிறந்து கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷ். கடந்த 2007ம் ஆண்டு முதல் இவர் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார். இருப்பினும் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "கேஜிஎப்" திரைப்படம் இவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது என்றால் அது மிகையல்ல.
Sandalwood Super Star Yash
பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "கேஜிஎப்" திரைப்படம் கன்னட மொழி மட்டுமின்றி இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அந்த திரைப்படத்தை பெரிய அளவில் கொண்டாடினர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
Actor Yash Family
அதனைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎப் 2 திரைப்படமும் உலக அளவில் சுமார் 1200 கோடி ரூபாய் வசூலை தாண்டி மீண்டும் சாதனை படைத்தது. விரைவில் அந்த திரைப்படத்தின் மூன்றாம் பாக பணிகள் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
Varalakshmi viratham
இதற்கிடையில் முன்னணி நடிகராக மாறி உள்ள நடிகர் யாஷ், தற்பொழுது "டாக்ஸிக்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி மற்றும் ஹிந்தி நடிகை கரீனா கபூர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
Yash and Radhika
என்ன தான் மாஸ் ஹீரோவாக அவர் வலம்வந்தாலும், தனது குடும்பத்தை பொறுத்தவரை சிறந்த கணவராகவும் நல்ல தகப்பனாகவும் வாழ்ந்து வருபவர் யாஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தனது குடும்பத்தோடு வரலட்சுமி விரதம் அவர் கொண்டாடியுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை யாஷின் மனைவி ராதிகா பண்டிட் வெளியிட்டுள்ளார்.
யாஷ் முதல் நித்யா மேனன் வரை.. தேசிய விருது வென்றவர்களுக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?