மேக்கப் கூட போடல.. நான் கேட்டதுமே யோசிக்காம ஓகே சொன்னார் - இறப்புக்கு முன் கேப்டன் பற்றி மனம் திறந்த விவேக்!
Actor Vivek : நடிகர் விவேக் தனது இறப்புக்கு முன் வெளியிட்ட ஒரு தகவலில், நடிகர் விஜயகாந்த் குறித்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
actor vivek
அரசாங்க பணியில் இருந்து விலகி, விவேக் நடிகராக முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் தான் கடந்த 1987ம் ஆண்டு சுகாசினி நடிப்பில் வெளியான "மனதில் உறுதி வேண்டும்" என்கின்ற திரைப்படம். அந்த திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் விஜயகாந்தும் நடித்திருப்பார். அதன் பிறகு "எங்க முதலாளி", "காந்தி பிறந்த மண்", "தாயகம்" மற்றும் "தென்னவன்" போன்ற பல திரைப்படங்களில் கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார் திரு. விவேக்.
actor vivek movies
இந்த சூழலில் திரு. விவேக் தனது இறப்புக்கு முன் பங்கேற்ற ஒரு பேட்டியில் பேசும் பொழுது, விஜயகாந்த் குறித்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பேசி இருக்கிறார். கடந்த 2001ம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "விஸ்வநாதன் ராமமூர்த்தி" அந்த திரைப்படத்தில் விவேக் மற்றும் ராம்கி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.
actor vijayakanth
கதாசிரியராக அந்த திரைப்படத்தில் தோன்றும் விவேக், ஒரு காட்சியில் நடிகர் விஜயகாந்தை சந்தித்து அவருக்கு ஒரு ஸ்கிரிப்ட் சொல்லுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியை படமாக்க யோசித்த பொழுது விவேக், விஜயகாந்தை அணுகி அனுமதி கேட்க, இதற்கெல்லாம் என் அனுமதி கேட்கிறாய், காலை வீட்டுக்கு நேரடியாக வந்து சூட்டிங் எடுத்துகொள் என்று கூறியுள்ளார்.
viswanathan ramamoorthy
ஆச்சர்யத்தில் மூழ்கிய விவேக், காலையில் அவர் வீட்டுக்கு சென்றபோது, விஜயகாந்த் மேக்கப் இல்லாமல் அமர்ந்திருந்ததை கண்டு, ஏன் இன்னும் மேக்கப் போட்டுக் கொள்ளவில்லை? நான் மேக்கப் போட்டுவிட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனே அதற்கு விஜயகாந்த், "நீ நடிகன் விஜயகாந்திடம் தானே கதை சொல்ல வருகிறாய்? நான் வீட்டில் மேக்கப் இல்லாமல் தான் இருப்பேன், மக்களை அதை ஏற்பார்கள், வா ஷூட்டிங் ஆரமிக்கலாம் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிய விவேக், அவரை ஆரத்தழுவி நன்றி சொன்னாராம்.
இந்த இரண்டு திரை ஆளுமைகளும் இன்று நம்மோடு இல்லை என்றாலும், அவர்களுடைய புகழ் தமிழ் திரையுலகம் இருக்கும் வரை ஒளிரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.