ஒரு நாளைக்கு 25 தம்.. செயின் ஸ்மோக்கராக இருந்த நடிகர் விஷால்.. சட்டென்று விட்டது எப்படி? அவரே சொன்ன டிப்ஸ்!
பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஜி. கே ரெட்டி அவர்களின் மகனாக பிறந்து, இன்று தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஷால்.
Vishal
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழில் வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் கதையின் நாயகனாக அறிமுகமானார் விஷால். அதன் பிறகு அடுத்த ஆண்டே வெளியான சண்டக்கோழி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய புகழே பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல.
producer Vishal
கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான பாண்டியநாடு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதன் பிறகு இதுவரை அவர் ஒன்பது திரைப்படங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Actor Vishal
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் விஷால், கல்லூரி காலத்திலும், நடிக்க துவங்கிய காலகட்டத்திலும் தான் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்து வந்ததாகவும். ஒரு நாளைக்கு குறைந்தது 25 முறையாவது சிகரெட் பிடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் ஒரு நாள் அந்த பழக்கத்தை விட வேண்டும் என்று எண்ணிய அவர், தன் கடைசி சிகரட்டை flush செய்துவிட்டு நண்பா இனி உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டாராம். ஒருவர் தன்னிடம் உள்ள கெட்ட பழக்கத்தை விட, அவருடைய மன உறுதி தான் அவசியமானது என்றும், அதை படிப்படியாக குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.