- Home
- Gallery
- Malavika Menon : அழகூரில் பூத்தவளோ?.. நச்சென்ற சேலையில் ரசிகர்களை அடியோடு சாய்த்த மாளவிகா மேனன் - கூல் பிக்ஸ்!
Malavika Menon : அழகூரில் பூத்தவளோ?.. நச்சென்ற சேலையில் ரசிகர்களை அடியோடு சாய்த்த மாளவிகா மேனன் - கூல் பிக்ஸ்!
Actress Malavika Menon : கேரளாவில் பிறந்து, தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் கடந்த 13 ஆண்டுகளாக நடித்து வரும் பிரபல நடிகை தான் மாளவிகா மேனன்.

Actress Malavika
26 வயது நிரம்பிய நடிகை மாளவிகா மேனன், கடந்த 1988ம் ஆண்டு கேரளாவின் கொடுங்கலூர் என்கின்ற பகுதியில் பிறந்தவராவார். கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை இவர் தொடங்கினார்.
Malavika Menon
தொடர்ச்சியாக மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை மாளவிகா மேனன், கடந்த 2013ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் விக்ரம் பிரபுவின் "இவன் வேற மாதிரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார்.
Malavika Menon
தொடர்ச்சியாக தமிழில் "விழா", "பிரம்மன்", "வெத்து வேட்டு" மற்றும் "நிஜமா நிழலா" போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "அருவா சண்டை" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
Malavika Menon Photos
சில வருடங்களுக்கு முன்பு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகை மாளவிகா மேனன், தற்போது தொடர்ச்சியாக மலையாள மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் இரு மலையாள திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கவர்ச்சியில் எல்லை மீறிய யாஷிகா ஆனந்த்.. அதுக்குன்னு இப்படியா.. வைராலாகும் ஹாட் போட்டோ..