தங்கலான் கதை ரொம்ப பெருசு.. Sequel மட்டுமல்ல Prequel கூட அவர் எடுக்கலாம் - மனம் திறந்த விக்ரம்!
Vikram About Thangalaan : தங்கலான் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.
ranjith
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் தான் தங்கலான், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், பட குழுவினர் தற்பொழுது முழு வீச்சில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆணவப்படுகொலை என்பது வன்முறை இல்ல; அக்கறை தான் சாமி - ரஞ்சித் விளக்கம்
Malavika
ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் ஒரு கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் பசுபதி ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்கள் ஏற்று இந்த படத்தின் நடித்திருக்கின்றனர். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் மாளவிகா மோகனனும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
thangalaan
இந்நிலையில் தங்கலான் திரைப்பட பிரமோஷனில் உள்ள நடிகர் விக்ரம், அந்த திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டு இருக்கிறார். தங்கலான் திரைப்படத்தை 4 பாகங்களாக எடுக்க கூட வாய்ப்புகள் இருக்கிறது. காரணம் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதைக்களம் உள்ளது என்று கூறியுள்ளார்.
actor vikram
ஆகையால் ரஞ்சித் ஆசைப்பட்டல் இந்த தங்கலான் படத்தின் Prequel மற்றும் Sequel எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார் அவர். வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி உலக அளவில் தங்கலான் திரைப்படம் வெளியாகவுள்ளது.
வெட்கத்தில் சிவந்த சோபிதா..வாரி அணைக்கும் நாக சைதன்யா - வெளியான கியூட் எங்கேஜ்மெண்ட் பிக்ஸ்!