- Home
- Gallery
- அந்த மாதிரி கதை இவருக்கு செட்டாகுமா? SK பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி - "தாய் கிழவி" தான் ஹீரோயினாம்!
அந்த மாதிரி கதை இவருக்கு செட்டாகுமா? SK பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி - "தாய் கிழவி" தான் ஹீரோயினாம்!
Vijay Sethupathi : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விரைவில் தனது அடுத்த பட பணிகளை அவர் துவங்கவுள்ளார்.

Makkal Selvan
தமிழ் திரை உலகில் சுயம்புவாக முளைத்து, இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கும் வெகு சில நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. அவருடைய நடிப்பில் அண்மையில் வெளியான "மகாராஜா" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. அதேபோல தற்பொழுது மிஷ்கின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
Pandiraj
இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான "பசங்க" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வென்ற இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுடன் விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Director Pandiraj
ஏற்கனவே மிஸ்க்கின் இயக்கத்தில் உருவாகி வரும் "ட்ரெயின்" என்ற திரைப்படத்தில் தற்பொழுது விஜய் சேதுபதியின் நடித்து வரும் நிலையில், அப்பாடப் பணிகளை முடித்துவிட்டு பாண்டிராஜ் பட பணிகளை அவர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
nithya menen
மேலும் அந்த புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு நடிக்க பிரபல நடிகை நித்யா மேனன் அவர்களிடம் தற்பொழுது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்திற்கான பணிகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் கிராமிய கதைகளை தேர்வு செய்து இயக்கும் பாண்டிராஜின் கதை மக்கள் செல்வனுக்கு செட்டாகுமா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.