- Home
- Gallery
- Vijay Built new theatre : புதிதாக தியேட்டர் கட்டும் தளபதி விஜய்... அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?
Vijay Built new theatre : புதிதாக தியேட்டர் கட்டும் தளபதி விஜய்... அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைய உள்ள நிலையில், தற்போது அவர் புது திரையரங்கம் ஒன்றை கட்ட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Thalapathy Vijay
தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இத்தனை கோடி வாங்கினாலும், விரைவில் அவர் சினிமாவை விட்டு விலக உள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தளபதி 69 தான் நடிகர் விஜய் நடிக்க உள்ள கடைசி படமாகும். அப்படத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் குதிக்க உள்ளார் விஜய்.

Vijay
தற்போது அவர் நடித்துள்ள கோட் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், லைலா, சினேகா என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Ajith : ஷாலினியோடு ரொமாண்டிக் ரைடு செல்ல அஜித் வாங்கிய காஸ்ட்லியான ஃபெராரி கார்... அதன் விலை இத்தனை கோடியா?
vijay new theatre
கோட் படத்துக்கு பின் விஜய் நடிக்க உள்ள கடைசி திரைப்படமான தளபதி 69-ஐ இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள புதிய பிசினஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
bussy anand, vijay
அதன்படி அவர் புதிதாக திரையரங்கம் ஒன்றை கட்ட இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. அது எந்த இடத்தில் கட்ட இருக்கிறார் என்கிற அப்டேட் தற்போது கசிந்துள்ளது. நடிகர் விஜய் அந்த திரையரங்கை பாண்டிச்சேரியில் கட்ட உள்ளாராம். அதுவும் விஜய்யின் வலது கரமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்தின் மேற்பார்வையில் தான் இந்த திரையரங்கம் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மன நிம்மதியை தேடி சுவாமி தரிசனம்.. தனிமையில் அமர்ந்திருக்கும் தனுஷ்!