- Home
- Gallery
- Vadivelu Help: கால்... கை செயலிழந்து மருத்துவ செலவுக்கு அல்லாடும் காமெடி நடிகர் வெங்கல்ராவுக்கு வடிவேலு உதவி!
Vadivelu Help: கால்... கை செயலிழந்து மருத்துவ செலவுக்கு அல்லாடும் காமெடி நடிகர் வெங்கல்ராவுக்கு வடிவேலு உதவி!
பிரபல காமெடி நடிகர் வெங்கல்ராவ் சில தினங்களுக்கு முன்பு, கை - கால் செயலிழந்து மருத்துவ செலவுக்கு கூட கஷ்டப்படுவதாக தெரிவித்த நிலையில், இவருக்கு வடிவேலு தற்போது நிதி உதவி செய்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழில் பல படங்களில் நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர் வெங்கல்ராவ். இவர் கடந்த 2 வருடமாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்து, தன்னுடைய அன்றாட வேலைகளை கூட செய்து கொள்ள முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதி படும் தன்னுடைய தற்போதைய நிலையில் எடுத்து கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பேசி இருந்த அவர், நடிகர்கள் தனக்கு உதவ வேண்டும் என்றும், அவர்களை எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் கூறி இருந்தார்.
இதை தொடர்ந்து நடிகர் வெங்கல்ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் கொடுத்து உதவிய நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25,000, KPY பாலா ரூ.1 லட்சம் என அடுத்தடுத்து சில பிரபலங்கள் தன்னாலால் முடிந்த உதவியை அவருக்கு செய்து வந்தனர்.
Vadivelu, vengal rao, Simbu
இவர்களை தொடர்ந்து வெங்கல்ராவுடன் பல காமெடி காட்சியில் நடித்துள்ள, வடிவேலு தற்போது அவரின் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் வழங்கி உள்ளதாகவும், போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.