- Home
- Gallery
- Kanguva Movie : "தலைவரோடு" நேருக்கு நேர் மோதும் சூர்யா.. உச்சகட்ட குஷியில் Fans - "கங்குவா" ரிலீஸ் தேதி இதோ!
Kanguva Movie : "தலைவரோடு" நேருக்கு நேர் மோதும் சூர்யா.. உச்சகட்ட குஷியில் Fans - "கங்குவா" ரிலீஸ் தேதி இதோ!
Kanguva Release : சூர்யா நடிப்பில், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட மிக பிரம்மாண்டமான படங்களில் ஒன்றான கங்குவா திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

siruthai siva
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது.
kanguva movie
நடிகர் சூர்யா அவர்களுடைய திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ஒரு திரைப்படம் தான் "கங்குவா". பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் முழுமை பெற்று, இப்பொது ரிலீசுக்காக காத்திருக்கிறது.
kalki
இந்த 2024ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்த "கல்கி" திரைப்படம், ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி நடை போட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் "கங்குவா" திரைப்படமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக மாறி இருக்கிறது.
Kanguva
இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் சூர்யாவின் "கங்குவா" திரைப்படமும் வெளியாக உள்ளது.