சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. புதிய போஸ்டருடன் வெளியான புதிய அப்டேட் - இன்னும் ஒரு நாள் தான் இருக்கு!
Kanguva Update : நாளை மறுநாள் ஆகஸ்ட் 12ம் தேதி கங்குவா திரைப்படத்திலிருந்து ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
siruthai siva
ஏற்கனவே தமிழ் திரை உலகில் தல அஜித்தை வைத்து, பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தான் சிறுத்தை சிவா. முதல் முறையாக அவருடைய இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகனான சூர்யா இணைந்துள்ள திரைப்படம் தான் "கங்குவா". இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் தயாரித்து வருகிறார்.
kanguva
இதுவரை தமிழ் திரையுலகில் வெளிவராத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைகளத்தில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையிலேயே, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமும் கங்குவா தான் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது.
Fire Song
தமிழ் மட்டுமல்லாமல் சுமார் 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாக உள்ள நிலையில், அண்மையில் அந்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இப்போது அந்த திரைப்படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
Kanguva Trailer
நாளை மறுநாள் ஆகஸ்ட் 12ம் தேதி, கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், அக்டோபர் மாதம் 10ம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக மீண்டும் ஒரு ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது சூர்யாவின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக மாறி உள்ளது.
வேர்வையில் தொப்பறையாய் நனைந்து கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை சினேகா! வைரல் வீடியோ!