நானு போறேன் பாலிவுட்டுக்கு.. ஹிந்தியில் களமிறங்கும் சூர்யா - பட்ஜெட் 500 கோடியாம் - இயக்குனர் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் தற்பொழுது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சூர்யா, தற்பொழுது பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கின்ற முற்றிலும் மாறுபட்ட திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
Kanguva
நடிகர் சூர்யா தமிழ் திரை உலகில் களம் இறங்கிய புதிதில், பல விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் அதன் பிறகு தன்னை தானே செதுக்கிக்கொண்டு, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் பட்டியலில் அவரும் இணைத்திருக்கிறார்.
Siruthai Siva
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தேர்வு செய்து நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்கள் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்து வரும் கங்குவா திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vadivasal
கங்குவா திரைப்படத்தை முடித்த பிறகு சுதா கொங்காராவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையும் நடிகர் சூர்யா, ஒரே சமயத்தில் சுதா திரைப்படத்திலும் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின்படி இந்த இரு திரைப்படங்களை முடித்த பிறகு நடிகர் சூர்யா பாலிவுட் உலகில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Ravivarman
கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை பாலிவுட்டில் பிரபலமான மற்றும் மூத்த இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகும் என்றும், சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.