சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி.. பரபரப்பாக நடக்கும் "கொட்டுக்காளி" பட பணிகள் - வெளியான மாஸ் புகைப்படங்கள்!
Kottukkaali Movie Stills : தமிழ் சினிமாவில் "அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக" களம் இறங்கி, இன்று கதையின் நாயகனாக உயர்ந்துள்ள நடிகர் தான் சூரி. தற்பொழுது இவர் நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
Soori
தமிழ் சினிமாவில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கி இன்று கதையின் நாயகனாக உயரும் அளவிற்கு தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டுள்ளார் நடிகர் சூரி என்று கூறினால் அது மிகையல்ல.
Actress Anna Ben
ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் கதையின் நாயகனாக நடித்துவரும் சூரி. தற்பொழுது பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் மற்றொரு திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.
Director Vinoth Raj
கடந்த 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் வெளியான கூழாங்கல் (Pebbles) திரைப்படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு "கொட்டுக்காளி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
Kottukkaali Movie Stills
தற்பொழுது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை அண்ணா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்பொது இந்த திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.