வெற்றிநடை போடும் ரியோவின் ஜோ.. நண்பனை சந்தித்து வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன் - SK 21 லுக் தரமா இருக்கு!
Sivakarthikeyan Wished Joe Team : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
Rio Raj
அந்த வகையில் சின்ன திரையில் தொகுப்பாளராக பணியாற்றி தற்பொழுது வெள்ளி திரையில் நாயகனாக களம் இறங்கி, சரியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் தான் ரியோ ராஜ். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜோ.
Sivakarthikeyan
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசைய முறுக்கு" மற்றும் ரியோவின் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ஹரிஹரன் ராம் தற்போது இயக்குனராக தனது முதல் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
Joe Movie Heroine
இந்த திரைப்படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக பாவியா திரிகா நடித்துள்ள நிலையில், படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது நண்பரும், சக தொகுப்பாளருமான ரியோவை சந்தித்து, அவருக்கும் பட குழுவிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்பொழுது ராஜ்கமல் நிறுவனத்துடன் நடித்துவரும் திரைப்பட லுக்கில் மிரட்டலாக வந்து அவர் வாழ்த்து தெரிவித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.