- Home
- Gallery
- க்யூட்டாக போஸ் கொடுக்கும் சாந்தனு - கிகி.. குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..
க்யூட்டாக போஸ் கொடுக்கும் சாந்தனு - கிகி.. குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..
நடிகர் சாந்தனு தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பாக்யராஜ்

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் தான் சாந்தனு பாக்யராஜ், இவர் தனது தந்தையின் வேட்டிய மடிச்சுக்கட்டு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் 2008-ம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இதை தொடர்ந்து சித்து +2, கண்டேன், அம்மாவின் கைபேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் பாக்ஸ் ஆபீஸ் ரீதியில் அவருக்கு எந்த படமும் வெற்றிப்படமாக அமையவில்லை.
<p>Shanthanu</p>
இதனிடையே சாந்தனு பிரபல தொகுப்பாளினியான கிகி என்று அழைக்கப்படும் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடிகர் விஜய் முன்னின்று நடத்தி வைத்தார்.
இந்த நிலையில் சாந்தனு, அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்ளூஸ்டார் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாந்தனுவின் நடிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் சாந்தனுவின் திரை வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தம்பதி அவ்வப்போது சமூக வலைதலங்களில் வீடியோ வெளியிட்டு வருவதுடன் With Love Shanthnu Kiki என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.சாந்தனு, கிகி ஜோடிக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் பேசியிருந்தனர்.
சாந்தனு - கிகி இதுகுறித்து பேசிய போது “ நாங்கள் ஏதேனும் திருமணத்திற்கு சென்றாலே எப்போது குழந்தை என்று கேட்டு டார்ச்சர் செய்வார்கள் நாங்கள் இப்போது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் குழந்தையை தள்ளிப்போடவில்லை. எப்போது வர வேண்டுமோ அப்போது தானாக வரும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சாந்தனு தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.