- Home
- Gallery
- விஜய் - அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போலயே.! 63 வயதில் ஸ்டைலிஷ் அவுட் ஃபிட்டில் ராமராஜன் எடுத்த போட்டோ ஷூட்!
விஜய் - அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போலயே.! 63 வயதில் ஸ்டைலிஷ் அவுட் ஃபிட்டில் ராமராஜன் எடுத்த போட்டோ ஷூட்!
நடிகர் ராமராஜன், தற்போதைய ட்ரெண்டுக்கு மாறி... விஜய் - அஜித் உள்ளிட்ட இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் பிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமி என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரராக இருந்தவர் ராமராஜன் தான். அதாவது இவரின் நடிப்பில் வாரத்திற்கு ஒரு படமாவது வெளியாகி விடும். அந்த அளவுக்கு படு பிஸியான ஹீரோவாக வளம் வந்தார் ராமராஜன்.
இப்போதைய ஹீரோக்கள் தங்களின் காஸ்டியூமுக்கே பல லட்சத்தை செலவு செய்யும் நிலையில், ராமராஜனின் அதிக பட்ச காஸ்டியூம் பட்ஜெட் என்றால் ரூ.500 தான். பல ஹிட் படங்களில்... கூட இவரின் காஸ்டியூம் டவுசர் துண்டு தான். அதே போல் மிகவும் எளிமையாக வேஷ்டி சட்டையில் மட்டுமே இவரை பார்க்கமுடியும்.
ஒரு கட்டத்திற்கு மேல் தான் பேன்ட் சட்டையில் வெரைட்டி காட்டி நடித்தார். அப்படி நடித்த படங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பல ஏற்றம் இறக்கங்களை சந்தித்த ராமராஜன், 2012-ஆம் ஆண்டு வெளியான மேதை படத்திற்கு பின்னர் மொத்தமாக திரையுலகில் இருந்து விலகினார்.
பின்னர் இவரை குணச்சித்திர வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்த இவர், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தார். ஒருவழியாக இவர் எதிர்பார்த்தது போன்றே ஒரு கதை அமைய 'சாமானியன்' என்கிற படத்தில் நடித்தார். இந்த கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படத்தின் தோல்வியால்... மனம் நொந்து போன, ராமராஜன் இனி முன்னணி நடிகர்களின் படங்களில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது ராமராஜன், விஜய் - அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.