- Home
- Gallery
- செம க்யூட்.. முதன்முறையாக தனது மகளின் முகத்தை ரிவீல் செய்த ராம்சரண்.. வைரல் போட்டோவை பார்த்தீங்களா?
செம க்யூட்.. முதன்முறையாக தனது மகளின் முகத்தை ரிவீல் செய்த ராம்சரண்.. வைரல் போட்டோவை பார்த்தீங்களா?
ராம்சரண் - உபாசனா தம்பதி தங்கள் மகளின் முகத்தை முதன்முறையாக வெளிப்படுத்தி உள்ளனர்.

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. இவரின் மகன் தான் ராம் சரண் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம் சரண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
RRR படத்தின் வெற்றிக்கு பிறகு ராம் சரணின் மார்கெட் மட்டுமின்றி சம்பளமும் உயர்ந்துள்ளது. தனது சம்பளத்தை அவர் பன்மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம் சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தங்கள் மகளுக்கு கிளின் காரா என்று பெயரிட்ட அவர்கள், குழந்தையின் முகத்தை வெளியே காட்டமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் ராம்சரண் - உபாசனா தம்பதி தங்கள் மகளின் முகத்தை முதன்முறையாக வெளிப்படுத்தி உள்ளனர்.
ramcharan baby
நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது மகளுடன் இருக்கும் போட்டோவை ராம் சரண் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவப்பு மற்றும் நீல நிற கோடுகள் கொண்ட சட்டையை ராம் சரண் அணிந்திருக்கிறார். ரெட் கலரில் ஃப்ராக் மற்றும் ப்ளூ கலர் லெகின்ஸ் அணிந்து க்யூட்டாக சிரிக்கிறார்.
ramcharan baby
ராம் சரண் தனது மகள் நடிகையாக வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்பதை ஏற்கனவே கூறியிருந்தார்.. மாறாக, அவர் தனது தாயான உபாசனாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியிருந்தார்.. குடும்பத்தில் போதுமான நடிகர்கள் இருப்பதால் மகளுடன் போட்டியிட விரும்பவில்லை என்றும் ராம்சரண் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.