மும்பையில் ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கிய மாதவன்.. தலைசுற்ற வைக்கும் விலை..
நடிகர் மாதவன் மும்பையில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Madhavan
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் கலக்கி வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் மாதவன். தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் அதிக பெண் ரசிகைகளை ஈர்த்தார் மாதவன்.
Madhavan
கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து போன்ற படங்களில் மாதவனின் நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. வெற்றி, தோல்விகளை மாறி மாறி ருசித்து வந்த மாதவன், தமிழில் அறிமுகமான அதே காலக்கட்டத்தில் பாலிவுட்டிலும் தனது கெரியரை தொடங்கினார்.
Madhavan
ஹிந்தியில் ரங் தே பசந்தி, குரு, 3 இடியட்ஸ் என பல வெற்றிப் படங்களில் நடித்தார். பின்னர் 2012-ம் ஆண்டில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்த மாதவன்.பின்னர் 2015-ம் ஆண்டு ஹிந்தியில் தனு வெட்ஸ் மனு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
Madhavan
தமிழில் 2016-ம் ஆண்டு இறுதி சுற்று, விக்ரம் வேதா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். பின்னர் ராக்கெட்ரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாதவன். இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
Director Madhavan
தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் மாதவன் சமீபத்தில் ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் மாதவன் மும்பையில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள இந்த அப்பார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 17.5 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Madhavan
சுமார் 4200 சதுர அடியில் பரந்து விர்ந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு ஆடம்பர சொகுசு வசதிகள் உள்ளதாம். இதற்காக மாதவன கடந்த 22-ம் தேதி ரூ.1.05 கோடி ஸ்டாம்ப் கட்டணத்துடன் ரூ. 30,000 பதிவு கட்டணமும் செலுத்தியதாக கூறப்படுகிறது.
Madhavan
நடிகர் மாதவன் தற்போது எஸ். சஷிகாந்தின் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சித்தார்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் அதிர்ஷ்டசாலி என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியிலும் சங்கரா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.