- Home
- Gallery
- தமன்னா குறித்து சர்ச்சை கருத்து.. கொந்தளித்த நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்த பார்த்திபன் - நடந்தது என்ன?
தமன்னா குறித்து சர்ச்சை கருத்து.. கொந்தளித்த நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Actor Parthiban : இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனின் "டீன்ஸ்" திரைப்படம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

Teenz
தமிழ் சினிமாவில், தனித்துவமான பல திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற பார்த்திபனின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் "டீன்ஸ்". உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தோடு போட்டியில் களமிறங்கி, தற்பொழுது நல்ல வசூல் சாதனையை படைத்து வருகிறது அந்த திரைப்படம்.
ஒன் சைடு லவ்... ஜோடி செட்டில் காதலை சொல்ல வந்த பிரபலத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளினி டிடி
Indian 2
கடந்த ஜூலை 12ம் தேதி "இந்தியன் 2" திரைப்படம் வெளியான அதே நாள், பார்த்திபனின் "டீன்ஸ்" வெளியானது. துவக்கத்தில் இந்த திரைப்படம் சற்று டல் அடித்தாலும், நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு இப்படத்திற்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றது. இது ஒருபுறம் இருக்க, அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல நடிகர் பார்த்திபன், நடிகை தமன்னா குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
tamannaah
"எனது திரைப்படத்தில் தமன்னா நடித்திருந்தால், ஒருவேளை அந்த திரைப்படம் இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். காரணம் தமன்னா போன்ற நடிகைகள் நடித்தால், அங்கு கதைக்கு அவசியம் இருக்காது" என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது. ஒரு பிரபல நடிகையின் திறனை, இது குறைத்து மதிப்பிடும் கருத்தாக இருக்கிறது என்று கூறி, இயக்குனர் பார்த்திபனுக்கு எதிராக நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வந்தனர்.
tamannaah bhatia
இந்த சூழலில் அவர் பேசிய மற்றொரு பேட்டியில் அதற்கு விளக்கமளித்துள்ள பார்த்திபன், தமன்னாவை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக நான் அப்படி பேசவில்லை. திரைக்கதைக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்பதை தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன். ஒருவேளை என் கருத்துக்கள் அவரையும் அவரது ரசிகர்களையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதில் அளித்திருக்கிறார் பார்த்திபன்.