- Home
- Gallery
- ராஜகுமாரன் மட்டும் மிஸ்ஸிங்... தேவையானியின் பேமிலியோடு எடுத்த போட்டோவை பதிவிட்டு வாழ்த்து சொன்ன நகுல்
ராஜகுமாரன் மட்டும் மிஸ்ஸிங்... தேவையானியின் பேமிலியோடு எடுத்த போட்டோவை பதிவிட்டு வாழ்த்து சொன்ன நகுல்
நடிகர் நகுல் தன்னுடைய அக்கா தேவையானியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அன்சீன் போட்டோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.

Devayani
நடிகை தேவையானி கடந்த 1995-ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து 1996-ம் ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் தேவையானிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் சரத்குமார் ஜோடியாக சூரியவம்சம், கமலுடன் தெனாலி, விஜய்க்கு ஜோடியாக ப்ரண்ட்ஸ், மம்முட்டி உடன் ஆனந்தம் போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.
Devayani husband Rajakumaran
இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராஜகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடித்தபோது, தேவையானிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது திருமணத்துக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.
இதையும் படியுங்கள்... விபரீதத்தில் முடிந்த விஜய்யின் பிறந்தநாள் விழா.. கையில் பற்றிய தீ; கதறிய சிறுவன் - பதபதைக்க வைக்கும் வீடியோ
devayani birthday
இதனால் சின்னத்திரைக்கு தாவிய தேவையானி, அதில் கோலங்கள் என்கிற சூப்பர் ஹிட் தொடரில் நடித்து பேமஸ் ஆனார். தேவையானியின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் மகளுடன் சேர்ந்துவிட்டனர். ஆனால் தேவையானியின் சகோதரரான நகுல் மட்டும் ராஜகுமாரன் மீதுள்ள கோபத்தில் நீண்ட நாட்களாக அவருடன் பேசாமல் இருந்து வந்தார். இதனை ராஜகுமாரனே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
Nakhul wishes Devayani
ஆனால் அண்மையில் நகுல் அளித்த பேட்டியில் ராஜகுமாரனுடன் தான் பேசிவருவதாக கூறி இருந்தார். இந்த நிலையில், நடிகை தேவையானி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நகுல் தேவையானி மற்றும் அவரது இரண்டு மகள்களுடன் தானும் தனது மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ராஜகுமாரன் எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அவர் அப்போவே அப்படி.. 22 ஆண்டுகளுக்கு முன் "அந்த" படத்தில் போடப்பட்ட அரசியல் விதை - தளபதியின் Flash Back!