Coolie : கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் டாப் ஹீரோ.. அட.. செம காம்போவா இருக்கே..
கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Rajinikanth
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.
vettaiyan movie
இந்த படத்தை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத், ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Coolie
இந்த படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன.
sathyaraj to act in coolie with rajinikanth
அதன்படி நடிகர் சத்யராஜ் கூலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மிஸ்டர் பாரத், பாயும் புலி, மூன்று முகம் என பல படங்களில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார். இந்த நிலையில் 38 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரஜினியும் சத்யராஜும் மீண்டும் இனைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் கூலி படத்தில் ரஜினியின் நண்பராக சத்யராஜ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
Coolie
சிவா, தளபதி ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனா கூலி படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர பிரபல மலையாள நடிகர் சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Coolie
இந்த சூழலில் கூலி படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா கூலி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு வில்லனாக அவர் ஹைதராபாத்தில் படபிடிப்பு முடிந்துள்ள நிலையில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Coolie
நடிகர் நாகார்ஜுனா தற்போது சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அவர் கூலி படத்தில் நடிக்கிறாரா என்பது, அப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே தெரியவரும்.