- Home
- Gallery
- இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர்.. பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் விஜய் ஆண்டனி.. சொத்து மதிப்பு இவ்வளவா?
இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர்.. பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் விஜய் ஆண்டனி.. சொத்து மதிப்பு இவ்வளவா?
நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Vijay Antony
நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. 2005-ம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.
vijay antony
அவர் தனது முதல் படத்தில் தனது வித்தியாசமான இசையின் மூலம் ரசிகர்கள் ஈர்த்தார். சுக்ரன் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்ப டூப்பர் ஹிட்டான நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
Vijay Antony
இதை தொடர்ந்து டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், அ,ஆ,இ,ஈ, வேட்டைக்காரன், அங்காடி தெரு, வெடி, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். விஜய் ஆண்டனியின் இசையில் உருவான பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.
police find vijay antony daughter meera death note nsn
அட்ரா, அட்ரா நாக்க முக்க, ஆத்திச்சூடி உள்ளிட்ட பாடல்களை பலரும் இன்று வரை வைப் செய்து கொண்டிருக்கின்றனர். தனது இசையின் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி 2010-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார்.
Actro Vijay Antony about daughter Meera emotional note
எமன், சைத்தான், கொலைகாரன், கோடியில் ஒருவன், அண்ணாதுரை என பல படங்களில் நடித்தார். இந்த படங்களில் சில படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து படங்களில்ந் அடித்து வருகிறார்.
Image: Instagram
இசையமைப்பாளர், நடிகர் மட்டுமின்றி எடிட்டராகவும் விஜய் ஆண்டனி பணியாற்றி உள்ளார். அண்னாதுரை, திமிரு பிடிச்சன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2, ரோமியோ என தனது படங்களுக்கு அவரே எடிட்டிங் செய்துள்ளார்.
vijay antony father died also by suicide when he was a child news after daughter meera nsn
மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாகவே அமைந்தது. விஜய் ஆண்டனி கடைசியாக ரோமியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய் ஆண்டனிக்கு சென்னையில் ரூ.5 கோடி மதிப்பில் ஒரு பங்களாவும், பெங்களூருவில் ரூ3 கோடி மதிப்புள்ள ஒரு வீடும் உள்ளது என்றும் கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ உள்ளிட்ட 4 ஆடம்பர சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.