அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு.. உள்ளே செல்லும் நடிகர் ஜெயம் ரவி.. ஏன் சார் இந்த திடீர் முடிவு? Latest Update!
Jayam Ravi in Bigg Boss : பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக் பாஸ் வீடு மூழ்கியுள்ள இந்த நேரத்தில், பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்கள் இன்று நவம்பர் 11ஆம் தேதி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார். இது குறித்த அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.
Arunmozhi Varman
இந்த ஆண்டு நடிகர் ஜெயம் ரவிக்கு இன்ப, துன்பங்கள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இந்த வருடத்தை துவக்கத்தில் வெளியான "அகிலன்" திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்காத நிலையில், அதை தொடர்ந்து வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டாம் பாகம் ஜெயம் ரவிக்கு ஒரு மாபெரும் ஹிட் திரைப்படமாக மாறியது. ஆனால் அதைத் தொடர்ந்து வெளியான இறைவன் திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ganga Death: அதிர்ச்சி டி.ராஜேந்தர் பட ஹீரோ... நடிகர் கங்கா திடீர் மரணம்!
Thug Life Kamalhaasan
இந்நிலையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு "பிரதர்", "சைரன்", "ஜினி" மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் "தக் லைஃப்" உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, சில பட பணிகளை முடித்துள்ளார் ஜெயம் ரவி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக உலக நாயகனின் "Thug Life" திரைப்படத்தில் அவர் இடம்பெற்றிருப்பது, ஜெயம் ரவி ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சி படுத்தி உள்ளது.
Siren
இந்த சூழலில் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், அந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது.
வெளியான தகவலின்படி நடிகர் ஜெயம் ரவி இன்று நவம்பர் 11ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார், அங்கே உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஜெயம் ரவி அவர்களின் சைரன் திரைப்படத்தின் டீசரை வெளியிடுகின்றார் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.