- Home
- Gallery
- அசத்தும் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்! நரிக்குறவர்களை நேரில் சந்தித்து என்ன செய்தார் தெரியுமா? வைரல் போட்டோ!
அசத்தும் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்! நரிக்குறவர்களை நேரில் சந்தித்து என்ன செய்தார் தெரியுமா? வைரல் போட்டோ!
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகனும் விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் நரிக்குறவர் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

Actor Chinni Jayanth
80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸிகளின் ஃபேவரைட் காமெடி நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். காமெடி நடிகர் என்பதையும் கடந்து ஹீரோவிற்கு நிகரான பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார். குணச்சித்திர நடிகர், வில்லன் என தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சின்னி ஜெயந்த் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்காக டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
Actor Chinni Jayanth Son
தற்போது மகனால் மீண்டும் திரையுலகில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் சின்னி ஜெயந்த் பெயர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019ஆம் ஆண்டு யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
Sruthan Jai Jayanth
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மைப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு பயிற்சி காலம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றினார். அதன்பின்னர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி துணை ஆட்சியராகவும், திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராகவும் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பதவி வகித்த சித்ரா விஜய் மகளிர் மேம்பாட்டு செயலாளராக பதவி பெற்று சென்றதை அடுத்து ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
Villupuram Deputy Collector Sruthan Jai Jayanth
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் தன்னுடைய பகுதியில் வாழும் நரிக்குறவர் மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்தார். அதோடு வீட்டுமனை பட்டா இல்லாத 7 குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.
Narikuravar
ஏற்கனவே பட்டா வைத்திருந்தவர்களுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இணைந்து வீடு கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆலோசனையும் வழங்கி இருக்கிறார். மேலும் தங்களுக்கு அடிப்படை செய்து கொடுக்குமாறு மனு அளித்தனர். அப்போது அங்கிருக்கும் நரிக்குறவ பெண்கள் ஒரு சிலர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு தங்கள் கையால் செய்யப்பட்ட பாசி மாலைகளை கழுத்தில் அணிவித்தனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.