மூன்று தலைமுறை நடிகர்கள்.. குடும்பத்தோடு ஜாலியா ஒரு திருவிழா - போட்டோஸ் போட்டு வாழ்த்து சொன்ன அருண் விஜய்!
Arun Vijay Deepavali Wish : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு குடும்பமாக திகழ்ந்து வருபவர்கள் தான் பிரபல நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய மகன் அருண் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.
Arun Vijay
விஜயகுமாரின் இரு மனைவிகளுக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார்(மருத்துவர்), அனிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியவர்கள்.
விஜய் அண்ணா ஓகே சொல்லிட்டாரு.. இரு மலைகளை இணைக்க காத்திருக்கும் அட்லீ - அப்போ மாஸ் சம்பவம் லோடிங்!
Arun Vijay Family
இதில் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "முறை மாப்பிள்ளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதையின் நாயகனாக அறிமுகமானார். தொடர்ச்சியாக அவர் பல திரைப்படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் அவருக்கு அப்போது வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில்தான் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" திரைப்படம், அருண் விஜய்க்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.
Vijayakumar
அன்று தொடங்கி இன்று வரை இந்த 8 ஆண்டுகளில் பல வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடித்து தனது திறமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் நடிகர் அருண் விஜய். தற்பொழுது பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் "வணங்கான்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் "பார்டர்" மற்றும் "மிசின் " சாப்டர் ஒன்" ஆகிய திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது.
Vijayakumar and Family
இந்நிலையில் தனது தந்தை விஜயகுமார் மற்றும் தாய் முத்துக்கண்ணு ஆகியோருடன் இணைந்து இந்த தீபாவளி திருநாளை அவர் இன்று கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது அவருடைய மகள், மகன் மற்றும் மனைவி ஆரத்தி அருண் விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.