- Home
- Gallery
- Arun Vijay: 18 வருடத்திற்கு முன்பே... அருண் விஜய் திருமணத்தை தடபுடலாக நடத்திய விஜயகுமார்! Unseen போட்டோஸ்!
Arun Vijay: 18 வருடத்திற்கு முன்பே... அருண் விஜய் திருமணத்தை தடபுடலாக நடத்திய விஜயகுமார்! Unseen போட்டோஸ்!
பழம்பெரும் நடிகர் விஜயகுமார், தன்னுடைய ஒரே மகனான அருண் விஜய்க்கு 18 வருடங்களுக்கு முன்பே.. கோலிவுட் திரை உலகம் வியக்கும் அளவுக்கு மிகப்பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைத்துள்ளார். இது குறித்த Unseen புகைப்படங்கள், மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில், தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். இவர் பழம்பெறும் நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கன்னுவின் மகன் ஆவார். தன்னுடைய அப்பாவை தொடர்ந்து, வாரிசு நடிகர் என்கிற அடையாளத்துடன், கடந்த 1995 ஆம் ஆண்டு 'முறை மாப்பிள்ளை' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
பிரபலத்தின் மகன் என்பதால், அருண் விஜய்க்கு ஹீரோ வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டாலும், இவர் தமிழ் சினிமாவில் தன்னை சிறந்த நடிகராக நிலை நிறுத்திக் கொள்ள பல வருடங்கள் ஆனது.
காரணம் 'முறை மாப்பிள்ளை' படத்திற்கு பின்னர், இவர் நடித்த பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, துள்ளி திரிந்த காலம், கண்ணால் பேசவா, அன்புடன், போன்ற படங்கள் தொடர்ந்து இவருக்கு தோல்வி முகத்தையே காட்டியது.
ஆனால் இயக்குனர் சேரன் இயக்கத்தில்... அருண் விஜய் நடித்த பாண்டவர் பூமி திரைப்படம் அருண் விஜய் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் முத்தம், இயற்கை, ஜனனம், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தவம், வேதா, மலை மலை, போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியோ, வசூல் ரீதியான வெற்றியோ பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன.
ஆனால் ஹீரோவாக நடித்த அருண் விஜய், அதிரடியாக தமிழில் வில்லனாக களமிறங்கிய திரைப்படம் 'என்னை அறிந்தால்'. அஜித்துக்கு தரமான ஹீரோவாக இறங்கி நடித்த அருண் விஜயின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
மேலும் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வந்த அருண் விஜய்க்கு, இப்படம் ஒரு பாலமாக அமைந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார் அருண் விஜய்.
அந்த வகையில் இவர் நடித்த குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, சினம், மிஷின் சேப்டர் 1, போன்ற படங்கள் இவருக்கு ஹீரோவாக நிலையான வெற்றியை கொடுத்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தேடி தந்தது.
தற்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துள்ள 'வனங்கான்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் இப்படம் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் சிறந்த நடிகர் என்பதை தாண்டி, ஒரு சிறந்த கணவர், அப்பா, மகன், சகோதரன் என்பதையும் நிரூபித்து வருகிறார். இந்நிலையில் கோலிவுட் திரையுலகமே வியக்கும் வகையில் நடந்த இவரது திருமண புகைப்படங்கள் தான் சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றன.
அருண் விஜயின் அப்பா விஜயகுமார், தன்னுடைய இரண்டு மனைவியுடன் முன் நின்று தன்னுடைய ஒரே மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். அதே போல் அருண் விஜய் சகோதரிகளான கவிதா, அனிதா, வனிதா, பிரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய அனைவருமே ஒரே நிற புடவையில் கழுத்து முழுக்க தங்க நகைகள் அணிந்து ஜொலிக்கின்றனர்.
அருண் விஜய்க்கு கடந்த 2006 ஆம் ஆண்டு, ஆர்த்தி மோகன் என்பவருடன் திருமண நடந்தது. இந்த திருமணத்தில் நடிகை ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். தற்போது அருண் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.