- Home
- Gallery
- அர்ஜுனுக்கு ஒரே நேரத்தில் ஆசையாக முத்தமிடும் மகள்கள்.. இந்த க்யூட் போட்டோவை பார்த்தீங்களா?
அர்ஜுனுக்கு ஒரே நேரத்தில் ஆசையாக முத்தமிடும் மகள்கள்.. இந்த க்யூட் போட்டோவை பார்த்தீங்களா?
ஐஸ்வர்யா, அஞ்சனா இருவரும் தங்கள் தந்தையான அர்ஜுனின் கன்னத்தில் முத்தமிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

90களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என பல ஹீரோக்கள் உச்சத்தில் இருந்த போதே தனக்கென தனி ரசிக பட்டாளத்தை வைத்திருந்தார் அர்ஜுன். தற்போது நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாப்பாத்திரம் என அர்ஜுன் நடித்து வருகிறார். கடைசியாக லியோ படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார்.
Umapathy ramaiah Aishwarya Arjun Arjun Sarja
அர்ஜுனுக்கு மொத்தம் 2 மகள்கள். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனிடையே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கலந்து கொண்டார். அப்போது உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த ஜோடி தங்கள் காதலை இரு வீட்டிலும் சொல்லி தங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.
இதை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி உமாபதி – ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஐஸ்வர்யா - உமாபதி திருமணம், வரவேற்பு மற்றும் அதன்பின்னர் நடத்தப்பட்ட போட்டோஷுட் என பல போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை அஞ்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய படங்களைப் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா, அஞ்சனா இருவரும் தங்கள் தந்தையான அர்ஜூனின் கன்னத்தில் முத்தமிடும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aishwarya Arjun - Umapathy Reception Photos
முன்னதாக தனது மகள் திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் அர்ஜுன் “ நானும் தம்பி ராமையாவும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் ஒரு நாள் உறவினர்களாக மாறுவோம் என்று எங்களுக்குத் தெரியாது" எ இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, நிறைய கலாச்சாரங்களை கொண்ட ஒரு அற்புதமான குடும்பத்தில் என் மகள் ஒரு மருமகளாக போயுள்ளார் என்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மேலும் பேசிய அவர் " நான் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியின் மூலம் எனது மருமகன் உமாபதியை சந்தித்தேன். பல போட்டியாளர்கள் இருந்தனர், ஆனால் நான் அவரை மிகவும் விரும்பினேன். அப்போது அவர் என் மகளைக் காதலிப்பார் என்று எனக்குத் தெரியாது. அவரது எளிமை, நேர்மை, மற்றும் எனர்ஜி ஆகியவற்றால் நான் அவரை விரும்பினேன். அவர் மிகவும் திறமையானவர்.
Aishwarya Arjun - Umapathy Reception Photos
ஆக்ஷன் ஹீரோவுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு. தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அவர் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வரப் போகிறார் என்பதை மிக விரைவில் பார்க்கலாம். அவர் என் மருமகன் என்பதால் இதைச் சொல்லவில்லை.” என்று கூறினார்