- Home
- Gallery
- சிங்கிள் வாழ்க்கைக்கு குட் பை.. "மெட்ரோ" நாயகன் ஷிரிஷ்க்கு கல்யாணம் - நேரில் வந்து வாழ்த்திய தனுஷ் & SK!
சிங்கிள் வாழ்க்கைக்கு குட் பை.. "மெட்ரோ" நாயகன் ஷிரிஷ்க்கு கல்யாணம் - நேரில் வந்து வாழ்த்திய தனுஷ் & SK!
Actor Metro Shirish : பிரபல நடிகர் மற்றும் சமூக சேவகர் மெட்ரோ ஷிரிஷ், நேற்று ஜூலை 12ம் தேதி தனது பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பை சொல்லியுள்ளார்.

Dhanush
நல்ல பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் மெட்ரோ ஷிரிஷ், கடந்த 1994ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி சென்னையில் பிறந்தார், இவருக்கு வயது 30. தான் கல்லூரியில் பயிலும் காலத்தில் அறிமுகமான, ஆனந்த கிருஷ்ணன் என்பவருடைய இயக்கத்தில் உருவான "மெட்ரோ" என்கின்ற திரைப்படத்தில் நடித்து கலையுலகில் அறிமுகமானார்.
ரூ.1000 கோடியைத் தாண்டி எகிறிய கல்கியின் வசூல் வேட்டை! தெறிக்கவிடும் பிரபாஸ் - புஜ்ஜி காம்போ!
Sivakarthiekyan
இதைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு வெளியான "ராஜா ரங்குஸ்கி", அதன் பிறகு வெளியான "Blood Money" மற்றும் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "பிஸ்தா" ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் ஷிரிஷ்.
Arun pandian
திரைப்படங்களில் பயணிப்பது மட்டுமில்லாமல், சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மெட்ரோ ஷிரிஷ், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தாக்குதலின்போது பலருக்கும், தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளார்.
Shirish
இந்நிலையில் நேற்று ஜூலை 12ம் தேதி, தனது நீண்ட நாள் காதலியான ஹஸ்னாவை திருமணம் செய்து கொண்டார் மெட்ரோ ஷிரிஷ். இந்த திருமண விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் பாண்டியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.