- Home
- Gallery
- Ajith : பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்ட சரித்திர படத்துக்காக... முதன்முறையாக இணைகிறதா அஜித் - ஷங்கர் கூட்டணி?
Ajith : பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்ட சரித்திர படத்துக்காக... முதன்முறையாக இணைகிறதா அஜித் - ஷங்கர் கூட்டணி?
கோலிவுட்டில் இதுவரை இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த ஷங்கர் - அஜித் கூட்டணி முதன்முறையாக கைகோர்க்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Ajith, shankar
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படுபவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இந்தியன் 2. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளன. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
Ajith team up with shankar
இதுதவிர ஷங்கர் கைவசம் உள்ள மற்றொரு படம் கேம் சேஞ்சர். இப்படம் தெலுங்கில் தயாராகி வருகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Ajith : தலயின் Good Bad Ugly.. படத்தில் இணைந்த பிரேமலு பிரபலம் - வேற லெவல் பிளானில் ஆதிக் - லேட்டஸ்ட் அப்டேட்!
Shankar Next Movie With Ajith
இந்த இரண்டு பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆன பின்னர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படம் உருவாகி உள்ளது. மதுரை எம்.பி. சு.வெங்கடேஷன் எழுதிய வேள்பாரி என்கிற கதையை திரைப்படமாக உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் ஷங்கர். பாகுபலியை போன்று பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள அவர் இதில் முன்னணி நடிகர், நடிகைகளை நடிக்க வைக்கும் ஐடியாவில் உள்ளார்.
Ajith in Shankar's Velpari?
இந்த நிலையில், தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக இருப்பது நடிகர் அஜித்தும், இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ள செய்தி தான். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம். அநேகமாக அஜித்தை வேள்பாரி படத்தில் நடிக்க தான் ஷங்கர் அணுகியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டும் உறுதியானால் கோலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக வேள்பாரி உருவெடுக்கும்.
இதையும் படியுங்கள்... நடிச்சது 5 படம் தான்... ஆனா 300 கோடிக்கு சொத்து இருக்கு; 23 வருஷமா நடிக்கல; மவுசும் குறையல - யார் இந்த நடிகை?