நடிகர் அஜித் ஆசை ஆசையாய் கட்டிய வீடு... சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டம் ஆக்கிய அதிகாரிகள் - காரணம் என்ன?
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Ajith house
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி, தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்து, இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் அஜித். கிட்டத்தட்ட அஜித் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிறது. இன்றளவும் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
Thala Ajith
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் வெளிநாட்டுக்கு சென்றுள்ள இந்த நேரத்தில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அதன் காரணமாக அஜித்தின் வீட்டு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ajith injambakkam house
நடிகர் அஜித் தன்னுடைய ஈஞ்சம்பாக்கம் வீட்டை கடந்த 2017-ம் ஆண்டு தான் புதுப்பித்தார். அப்போது நவீன வசதிகளுடன் ரிமோட் கண்ட்ரோல் உடன் கூடிய வீடாக இதனை மாற்றினார் அஜித். மேலும் இந்த வீட்டில் சகல வசதிகளும் இருக்கும்படி மாற்றி அமைத்து அதில் குடும்பத்துடன் குடியேறினார். இப்படி அஜித் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Ajithkumar
நடிகர் அஜித் பல லட்சம் செலவழித்து கட்டிய அந்த பெரிய சுற்றுச்சுவர் இடிக்கட்டுள்ளதோடு, அஜித் வீட்டின் கேட்டும் அகற்றப்பட்டு இருக்கிறது. இதனால் அஜித் வீட்டில் உள்ளவர்கள் வேறு வழியில் சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிகள் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் நேரடியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... சர்வதேச விருதுகளை வென்று குவித்த நயன்தாராவின் ‘கூழாங்கல்’ படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிறது- எப்போ தெரியுமா?