- Home
- Gallery
- Ajith Vadivelu Issue : எவ்வளவு சொல்லியும் கேட்காத வடிவேலு.. ஆனா அஜித் கொடுத்த தரமான பதிலடி..
Ajith Vadivelu Issue : எவ்வளவு சொல்லியும் கேட்காத வடிவேலு.. ஆனா அஜித் கொடுத்த தரமான பதிலடி..
அஜித் - வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் பல போராட்டங்களை கடந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக மாறி உள்ளவர் அஜித். தற்போது அஜித் குட், பேட், அக்லி படத்தில் நடித்து வருகிறார். அவரின் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரின் ரசிகர்கள் அஜித் படங்களை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
அஜித் பற்றி நல்ல விதமான தகவல்களையே இதுவரை நாம் கேட்டிருப்போம். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர், ஜெண்டில் மேன் என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் அஜித் - வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது.
நடிகர் அஜித் மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு 2002 வரை தொடர்ந்து படங்களில் இணைந்து நடித்து வந்தனர்.ஆனால் அஜீத்தும் வடிவேலுவும் இணைந்து நடித்த கடைசி படம் 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா திரைப்படம். இவர்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் வேறு லெவலில் ஹிட் ஆனது. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அஜீத்தும் வடிவேலுவும் இணைந்து நடிக்கவில்லை. இந்த கூட்டணி 20 ஆண்டுகளாக மீண்டும் இணையாமல் இருப்பதற்கு ராஜா படத்தின் போது ஏற்பட்ட மோதலே காரணம் என்று கூறப்படுகிறது.
ராஜா படத்தில் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்திருப்பார், இதனால் படம் முழுவதும் அஜித்தை போடா வாடா என்றே அழைக்கிறார். படப்பிடிப்பிற்கு பிறகும் வடிவேலு அஜித்தை வாடா போடா என்று அழைத்ததாகவும், அதை ஜித்தை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அஜீத் இயக்குனரிடம் தனது அதிருப்தியை தெரிவித்தாராம். உடனே. இந்த விஷயத்தை வடிவேலுவிடம் இயக்குனர் சொல்ல, அதை கண்டுகொள்ளாத வடிவேலு, மீண்டும் அஜித்தை வாடா போடா என்று பேசியதாகவும் கூறப்படுகிறது..
இதனால் படத்தின் ஷூட்டிங் முடியும் வரை அஜித் வடிவேலு உடன் சரியாக பேசவில்லை என்றும், அதன்பின்னர் வடிவேலு உடன் இணைந்து பணியாற்றும் படங்களுக்கு அஜித் நோ சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜித்-வடிவேலு கூட்டணி 20 வருடங்களுக்கு மேலாக இணைந்து பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு ஒரு விழாவில் அஜித்தும், வடிவேலும் நேரடியாக சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு வந்ததாம், அப்போது வடிவேலுவிடம் சென்ற அஜித், அண்னே எப்படி இருக்கீங்க என்று கேட்டாராம். இதனால் வடிவேலுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். இந்த தகவலை பிரபல இயக்குனர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.