இந்த 5 ராசிக்காரங்க இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்காம்!!
Rasi Palan : ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து ராசிகர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த ராசிக்காரர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
பல சமயங்களில் சில ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டாலும், எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில், ஜோதிட சாஸ்திரத்தின் படி இரண்டாவது திருமணம் செய்ய போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
ரிஷபம் : திருமணம் என்று வரும்போது ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்ப்புகளுக்கு குறைவான எதையும் விரும்புவதில்லை. ஒருவேளை விரும்பிய பலன்கள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் முதல் திருமணத்தை முறித்துக் கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்கள்.
துலாம் : துலாம் ராசிக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் பெற விரும்புகிறார்கள். அது முதல் திருமணத்தில் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள்.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் தமிழ் முதல் திருமண துணையிடமிருந்து எதிர்பார்த்த தொடர்பு கிடைக்கவில்லை என்றால், இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: இந்த 5 ராசிக்காரங்க முட்டாள்தனத்தால் அடிக்கடி ஏமாறுவாங்க.. இதுல உங்க ராசி இருக்கா..?
தனுசு : தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் சுதந்திரமானவர் என்பதால், அவர்கள் தங்கள் முதல் வாழ்க்கை துணையிடம் இதை எதிர்பார்க்கிறார்கள். மேலும், இரண்டாவது திருமணத்திற்கு கூட எந்த விதத்திலும் தன்னுடைய சுதந்திரத்தில் தலையிடாத வாழ்க்கை துணை மட்டுமே திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Rasi Palan : எந்த ராசி எந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் சிறந்த ஜோடி..?!
கும்பம் : கும்ப ராசிக்காரர்கள் முதல் திருமணத்தில் தங்கள் துணையிடமிருந்து வாழ்க்கையில் விரும்பியது அடைய முடியாது என்பதால், அவர்கள் தங்கள் முதல் திருமணத்திலிருந்து விலகி இரண்டாவது திருமணம் செய்கிறார்கள்.