- Home
- Gallery
- திருக்கடையூர் கோவிலில் மாமனார் மாமியாருக்கு விஜய ரத சாந்தி விழா - கணவருடன் பங்கேற்ற நடிகை நிக்கி கல்ராணி
திருக்கடையூர் கோவிலில் மாமனார் மாமியாருக்கு விஜய ரத சாந்தி விழா - கணவருடன் பங்கேற்ற நடிகை நிக்கி கல்ராணி
திருக்கடையூரில் தன்னுடைய மாமனார் மாமியாருக்கு நடைபெற்ற விஜய ரத சாந்தி விழாவில் நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்றார்.

Aadhi - Nikki Galrani
கோலிவுட்டில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆதி - நிக்கி கல்ராணி. மரகத நாணயம் படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள், பின்னர் காதல் வயப்பட்டு திருமணமும் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் நடிகை நிக்கி கல்ராணி சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
Aadhi - Nikki Galrani Temple Visit
இந்நிலையில், நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி ஜோடி மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஜ்வரர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகர் ஆதியின் தந்தையும் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநருமான ரவிராஜா பினிசெட்டியின் 75வது பிறந்தநாளையொட்டி அங்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... நிஜமாவே கோல்டு-ணா நீ... புதிதாக BMW கார் வாங்கியதும் தங்கதுரை செய்த செயலுக்கு குவியும் பாராட்டு
Aadhi - Nikki Galrani at Thirukadaiyur temple
அதுமட்டுமின்றி நிக்கி கல்ராணியின் மாமனார், மாமியார் இருவருக்கும் விஜய ரத சாந்தி விழாவும் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆயுள் ஹோமம், மிருத்துஞ்சிய ஹோமம் போன்ற ஹோமங்களை அர்ச்சகர்கள் மேற்கொண்டனர். பின்னர் ஆதியின் பெற்றோர் மாலை மாற்றிக் கொண்டு புனித நீர் அடங்கிய கலசத்தை கையில் ஏந்தியபடி கோவிலை சுற்றி வந்தனர்.
Aadhi - Nikki Galrani selfie
பின்னர் அவர்கள் இருவரையும் பிரகாரத்தில் அமர வைத்து, அந்த கலசத்தில் உள்ள புனித நீர் கொண்டு ஆதியும், நிக்கி கல்ராணியும் அபிஷேகம் செய்தனர். பின்னர் சாமி சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆதி நிக்கி கல்ராணி ஜோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... எல்.ஐ.சி பட டைட்டிலை பட்டி டிங்கரிங் பார்த்து மாற்றிய விக்னேஷ் சிவன்... புது டைட்டில் என்ன தெரியுமா?