1986 இல் ராயல் என்ஃபீல்டு பைக் விலை இவ்வளவு தானா.. விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
Royal Enfield Price in 1986 : 1986 இல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350cc பைக்கின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த பைக்கின் பழைய பில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது எவ்வளவு விலை? ஏன்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Royal Enfield Bullet 350cc Bill
இந்திய இராணுவம் முதன்மையாக ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளை எல்லைப் பகுதிகளில் ரோந்து செய்ய பயன்படுத்தியது. ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் அப்போது முதல் இப்போது வரை இந்திய மக்களிடையே புகழ் பெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள புல்லட் பிரியர்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 புல்லட்களை சில காலமாக வாங்குகின்றனர்.
Royal Enfield Bullet 350cc
இது நிறுவனத்தால் மிக நீண்ட காலத்திற்கு தயாரிக்கப்பட்டது என்பதால், இதனை வைத்திருப்பது கெத்தாகவும், பெருமையாகவும் சிலருக்கு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆனது பல ஆண்டுகளாக சில சிறிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், வடிவமைப்பாளர்கள் பைக்கின் தோற்றத்தையும் உணர்வையும் பாதுகாக்க முயற்சி செய்தனர்.
Royal Enfield Bullet
ஆல் நியூ கிளாசிக் 350 விலை ரூ. 2.2 லட்சம் என அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் (எக்ஸ்-ஷோரூம்) தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பைக்கின் விலை ரூ.18,700 என்பது உங்களுக்குத் தெரியுமா? இது விசித்திரமாகத் தோன்றினாலும், ஜனவரி 23, 1986 முதல் பைக்கின் விலையைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
Royal Enfield Bullet in 1986
விண்டேஜ் பைக் ஆர்வலர் ஒருவர் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் புல்லட்டின் விலைப்பட்டியல் ரூ. 18,700 என்றும், இது 36 ஆண்டுகள் பழமையானது என்றும் சந்தீப் என்ற டீலர் வழங்கியது என்றும் காட்டினார். ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள ஆட்டோ நிறுவனம் 36 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.18 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.
Old Bullet Bike Price
அப்போது பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள புல்லட் வெறுமனே என்ஃபீல்டு புல்லட் என்று அழைக்கப்பட்டது. இந்திய இராணுவம் முதன்மையாக இந்த நம்பகமான மோட்டார் சைக்கிளை எல்லைப் பகுதிகளில் ரோந்து செய்ய பயன்படுத்தியது. என்ஃபீல்டு புல்லட் பைக் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது.
330 கிமீ வரை மைலேஜ்.. உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பஜாஜின் ஃப்ரீடம் 125.. விலை ரொம்ப கம்மி!