- Home
- Gallery
- Special Train : நெல்லை, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு ரயில்.! எப்போ தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு
Special Train : நெல்லை, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு ரயில்.! எப்போ தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு
ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று சென்னையில் இருந்து திருச்சி மற்றும் நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

சிறப்பு ரயில் அறிவிப்பு
வெளியூர் செல்வதற்கு பொதுமக்கள் முதலில் நாடுவது ரயிலை மட்டுமே, பாதுகாப்பு வசதியோடு அடிப்படை வசதிகளும் இருப்பதால் ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் 120 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. எனவே பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்று திருச்சி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது.
தாம்பரம் டூ திருச்சி
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிலையில் தாம்பரத்திலிருந்து திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் 2ஆம் தேதி இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(ரயில் எண் 06007) திருச்சிக்கு அடுத்த நாள் காலை 6:40 மணிக்கு சென்று சேருகிறது. இதே போல திருச்சியில் இருந்து (ரயில் எண் 06008 ) 3ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை தாம்பரத்திற்கு 5.50 மணிக்கு வந்து சேருகிறது.
திருச்சி டூ தாம்பரம்
தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சியை சென்று சேருகிறது. இதேபோல 3ஆம் தேதி திருச்சியில் புறப்பட்டு அடுத்த நாள் 4ஆம் தேதி தாம்பரத்தை வந்தடைகிறது.
நாகர்கோவில் டூ சென்னை
மற்றொரு சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. ரயில் எண் (06005) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு வழி சிறப்பு விரைவாக இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10. 45 மணிக்கு புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 11 மணிக்கு நாகர்கோயிலை சென்று சேருகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோயிலில் சென்று சேருகிறது.
முன்பதிவு தொடங்கியது
இந்த ரயிலில் இரண்டு ஏசி வகுப்பு பெட்டியும், 11 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியும், 3 முன்பதிவு செய்யப்படாத பெட்டியும் இடம் பெற்று இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.