Special Train : மதுரை டூ தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக, மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இரவு 8.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக காலை 6:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
ரயில்களில் கூட்ட நெரிசல்
சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு மக்கள் சென்றனர். இந்தநிலையில் மீண்டும் சென்னை திரும்ப பொதுமக்கள் திட்டமிட்டிருக்கும் நிலையில், ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகளவு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் ஏற்னவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தெற்கு ரயில்வே சார்பாக தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
மதுரை டூ தாம்பரம்
இந்த நிலையில் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது (ரயில் எண் 06184) இந்த ரயிலானது இன்று(27.08.2024) இரவு 8.50 மணியளவில் மதுரையில் இருந்து புறப்படுகிறது. தாம்பரத்திற்கு நாளை காலை 6:30 மணிக்கு வந்து சேருகிறது.
ரயில்கள் பகலை விட இரவில் வேகமாக இயக்கப்படுவது ஏன்? காரணம் இதுதான்!!
முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள்
இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ஒன்றும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூன்றும், முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் ஆறும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 7 இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடங்கியது
இந்த சிறப்புரயிலானது மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு வந்து சேர்கிறது. மதுரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகின்ற இந்த சிறப்புரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ள.