Special Train : பயணிகளுக்கு குட் நியூஸ்.! தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு; எங்கிருந்து தெரியுமா.?
பண்டிகை கால பயண நெரிசலை சமாளிக்க, சென்னை மற்றும் கோவை இடையே சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விசாகப்பட்டினம் - சென்னை மற்றும் தன்பத் - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
பொதுமக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதன் காரணமாக அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டு பயணிகளின் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. இதனால் வேறு வழியின்றி பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ரயில் பயணத்தை பொறுத்தவரை பாதுகாப்போடு அத்தியாவசிய வசதிகளும் இருப்பதால் அனைத்து ரயில்களிலும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விடுகிறது.
இந்தநிலையில் சிறப்பு ரயில அறிவிக்கப்படுமா என பயணிகள் ஆவலோடு காத்துள்ளனர். அந்த வகையில் பூஜை கொண்டாட்டம் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மற்றும் சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!
விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும், எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கும் சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. (ரயில் எண் 08557/088558) இந்த ரயிலானது விசாகப்பட்டினத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி, 14 ஆம் தேதி, 21ம் தேதி மற்றும் 28ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இதே போல அக்டோபர் மாதத்தில் 2ஆம் தேதி, 9-ம் தேதி, 16ஆம் தேதி, 23ஆம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. மொத்தமாக 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது.
மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கும் 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், விசாகப்பட்டினம், அன்காபள்ளி ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர் வழியாக சென்னை எழும்பூரில் வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல கோவையில் இருந்து தன்பத்துக்கும், தன்பத்திலிருந்து கோவைக்கும் சிறப்பு வாராந்திர ரயிலானது இயக்கப்படுகிறது. (ரயில் எண் 03324/03326) இந்த ரயிலானது செப்டம்பர் மாதம் மதுல் ஜனவரி மாதம் வரை இந்த ரயில் சேவையானது 18 ரயில் சேவைகளை கொண்டுள்ளதாகும்
இந்த ரயிலானது தன்பத்திலிருந்து புறப்பட்டு கையா, அனுகிரானா ரோடு, ஜபல்பூர், விஜயவாடா, நெல்லூர், பெரம்பலூர், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவைக்கு சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.