வறண்டது வானிலை.! தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கா.? இதோ லேட்டஸ்ட் தகவல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையில், மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பா.?
தமிழகத்தில் கடந்த மாதமாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கேரளாவில் பெய்த பருவமழையால் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இது மட்டுமில்லாமல் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு சில நாட்களாக மழை முழுவதுமாக குறைந்துள்ளது. மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் வரும் நாட்களில் வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி,
மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 26.08.2024 மற்றும் 27.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.08.2024 முதல் 01.09.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எகிறிய அரிசி விலை; கலக்கத்தில் இல்லத்தரசிகள் - என்ன தான் தீர்வு?
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
26.08.2024 முதல் 30.08.2024 வரை; மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
26.08.2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27.08.2024 மற்றும் 28.08.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.