மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. அடிப்படை ஊதியம் உயர போகிறது.. விரைவில் குட்நியூஸ்..
ஜூலை 2024 முதல் அரசாங்கம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டின்மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ என்று அழைக்கப்படும் அகவிலைப்படி உயர்வு 4% அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அகவிலைப்படி சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2004 ஆம் ஆண்டில், 5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, அகவிலைப்படி 50% எட்டிய போது, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் டிஏ இணைக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்கள் இதுபோன்ற எந்த நடவடிகையையும் பரிந்துரைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அடிப்படை ஊதியம் அகவிலைப்படி உடன் இணைக்கப்படுமா என்ற ரீதியில் ஊகடகங்களில் தகவல் வெளியானது. இந்த தகவல்களுக்கு பதிலளித்த அரசு அதிகாரிகள், இந்த கட்டத்தில் அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி தானாக இணைக்கப்படாது என்று திட்டவட்டமாக கூறினர்.
எனினும் 50% அகவிலைப்படி வரம்பை அடைந்த பிறகு, ஏற்கனவே செய்தது போல அகவிலைப்படியை ஊதியத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று பல ஊழியர் அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஜூலை 2024 முதல் அரசாங்கம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஜனவரி மாத உயர்வுக்குப் பிறகு DA தற்போது 50% ஆக உள்ளது என்றும் 50% அளவை மீறவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஜூலை உயர்வுக்குப் பிறகு, டிஏ அடிப்படை ஊதிய அளவில் 50% ஐத் தாண்டும்.
ஜூன் மாதத்தில் மத்தியில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு டிஏ-அடிப்படை ஊதிய இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.டிஏ அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்ட பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.
ஊழியர்களுக்கான DA மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. DA மற்றும் DR ஐ ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசாங்கம் திருத்தி வருகிறது. சமீபத்தில், மத்திய அரசு DA மற்றும் DR ல் 4% உயர்த்தி, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 50% ஆகக் கொண்டு வந்தது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA உயர்வு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 50% ஆக இருந்த பிறகு, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை உட்பட சில சலுகைகள் மற்றும் விடுதி மானியம் தானாகவே 25% வரை திருத்தப்பட்டது.