நைட் டைம்ல இந்த 6 விஷயங்களை பண்ணாதீங்க.. இல்லனா பிரச்சினை தான்.. வாஸ்து சொல்றத கேளுங்க!!
Vastu Tips For Home : இந்து புராணங்கள் படி, இரவில் அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு லக்ஷ்மி தேவியின் ஆசிர்வாதத்தை பெற சில பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் சில விதிகள் உள்ளதும் அவற்றை சரியாக பின்பற்றவில்லை என்றால் நிறைய இழப்புகள் ஏற்படும். அந்த வகையில், இரவு நேரத்தில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன அது குறித்து இங்கு பார்க்கலாம்.
வாஸ்துபடி, இரவு நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது. மீறினால், வீட்டில் வறுமை ஏற்படும். மேலும் லட்சுமி தேவி கோபப்படுவாள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இரவில் பெண்கள் தலையை விரித்து தூங்கினால் எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது என்று அர்த்தம். இதனால் வீட்டில் நலன்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, கணவனின் ஆயுளும் குறையும்.
அதுபோல இரவு நேரத்தில் சமையல் அறையில் அழுக்கான பாத்திரங்களில் வைக்கக் கூடாது. மீறினால், லட்சுமிதேவி அங்கு வாசம் செய்வதில்லை. வீட்டில் வறுமை வர ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் மற்றும் வீட்டில் அமைதியின்மை ஏற்படும்.
இதையும் படிங்க: எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ் இதோ!!
சில வீடுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அல்லது இரவில் வீட்டை பெருக்குவார்கள். இவ்வாறு செய்தால் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது. லட்சுமி தேவி துடைப்பத்தில் வசிப்பதாக நம்மப்படுகிறது. எனவே, தெற்கு திசையில் துடைப்பத்தை வைத்து தூங்கினால், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
இதையும் படிங்க: செம்பருத்தி பூ பரிகாரம்: நிதி நெருக்கடி தீர; மன நிம்மதி கிடைக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!
தலை முடியை வெட்டுதல் அல்லது சீவுதல் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பெண்கள் தலை முடியை விட்டு அல்லது சிரிப்பு வரக்கூடாது. மீறினால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் வரும்.
தானம் இந்து மதத்தில் தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால், இரவு நேரத்தில் பால், சர்க்கரை அல்லது உப்பு போன்றவற்றை தானம் செய்வது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் ஒருவர் நிதி நெருக்கடியையும், வாழ்க்கையில் உறுதியற்ற தன்மையும் அனுபவிக்க நேரிடும்.