அடிக்கடி உங்களுக்கு மறதி ஏற்படுகிறதா? ஞாபக சக்தி அதிகரிக்க 5 சூப்பர் ஃபுட்கள்!
Foods To Boost Brain Power : பலவீனமான நினைவாற்றல் காரணமாக பலர் அடிக்கடி மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க நினைவாற்றலுக்கு எந்த ஊட்டச்சத்துக்கள் சிறந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
நம் உடலுக்கு உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றல் எப்படி தேவையோ, அதே போல நமது மூளைக்கும் செயல்பட ஆற்றல் தேவை என்பது நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில் நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் தான் அக்கறை செலுத்துகிறோம் தவிர, மூளை ஆரோக்கியத்திற்கு அக்கறை காட்டுவதில்லை.
உண்மை என்னவென்றால், நம் உடலின் மற்ற பாகங்களைப் போலவே மூளையின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், நம் உடல் முற்றிலும் மூளையை சார்ந்து இருக்கிறது. மூளை உடல் உறுப்புகளுக்கு சிக்னல்களை அனுப்புகிறது. அதன் பிறகு அவை எதிர்வினை ஆற்றுகிறது. நமது சிந்தனை, உணர்வு மற்றும் பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால், தற்போது பலருக்கு அடிக்கடி சிறிய விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள். இது படிப்படியாக நினைவகம் பலவீனம் அடைய வழிவகுக்கும். எனவே நினைவகத்தை மேம்படுத்த என்ன சாப்பிடலாம்? அவற்றை எப்படி கூர்மையாக்குவது என்று யோசிக்கிறீர்களா? மறதி நோயால் நீங்கள் அவதிப்பட்டால் அல்லது உங்களது நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க விரும்பினால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.
நட்ஸ்கள் மற்றும் விதைகள் : நட்ஸ்கள் மற்றும் விதைகள் வைட்டமின் ஈ -யின் சிறந்த ஆதாரம். இது அர்ஜுன் நேற்று அழுத்தத்தில் இருந்து மூளையை பாதுகாக்க உதவுகிறது. ஆய்வின் படி, இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
டார்க் சாக்லேட் : டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் மூளை செயல்பாடு மற்றும் மனநிலை மேம்படுத்தும்.
ப்ளூபெர்ரி : இதில் இருக்கும் அதிகளவு ஆக்சிஜனேற்றங்கள் மூளையை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதில்
ஃபிளாவனாய்டுகள் உள்ளது. அவை மூளை செயல்பாடு மற்றும் நினைவகத்தை மேம்படுத்தும்.
இதையும் படிங்க: இந்த கெட்ட பழக்கங்கள் உங்கள் மூளையை பலவீனமாக்கும்..! இவற்றை உடனே நிறுத்துங்கள்..!
கீரைகள் : கீரைகளில் மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளது. எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.
இதையும் படிங்க: பெற்றோர்களே! 'இந்த' உணவுகள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்... உங்கள் குழந்தைக்கு கொடுக்க மறக்காதீங்க..!
கொழுப்பு மீன்கள் : சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரமாகும். அவை மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கொழுப்பு அமிலங்கள் மூளை செல் சவ்வுகளை உருவாக்க உதவுகிறது மற்றும் மூளை செல்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துகின்றது. இது நினைவாற்றலை கூர்மைப்படுத்துகிறது மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்துகிறது.