- Home
- Gallery
- Wayanad : ஒரே குடும்பத்தில் 40 பேரை அடித்து சென்ற நிலச்சரிவு.! வயநாட்டில் மனதை நொறுங்க செய்யும் பேரதிர்ச்சி
Wayanad : ஒரே குடும்பத்தில் 40 பேரை அடித்து சென்ற நிலச்சரிவு.! வயநாட்டில் மனதை நொறுங்க செய்யும் பேரதிர்ச்சி
வயநாட்டில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wayanad Disaster
கடவுளின் தேசத்தில் இயற்கையின் கொடூரம்
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் இயற்கை தனது கொடூர முகத்தை மீண்டும் காட்டியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்த நிலையில் இன்னும் 250 பேரின் நிலை என்னவென்று தெரியாத வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களை ஒற்றும் இல்லாமல் ஆக்கியுள்ளது. இயற்கையோடு சந்தோஷமாக வாழ்ந்த மக்கள் அந்த இயற்கையே காவு வாங்கியுள்ளது
Wayanad Disaster
தூக்கத்தில் மண்ணில் புதைந்த உயிர்கள்
நள்ளிரவு நேர தூக்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள்ளாகவே பலர் மண்ணில் புதைந்து உயிரை பலிவாங்கியுள்ளது நிலச்சரிவு. அடுதடுத்து ஏற்பட்ட 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர். இதுவரை 320உடல்களை மீட்பு படையினர் மீட்ட நிலையில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் நிலை தெரியவில்லை. பல இடங்களில் கொத்து கொத்தாக மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.மலையில் இருந்து வந்த பாறை வீடுகளில் மோதி வீடுகள் இருந்த இடம் தெரியாமல் உருமாறியுள்ளது.
Wayanad Landslide | ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 பேரை பறிகொடுத்த டெய்லர் | Kerala | Asianet News Tamil
பள்ளி குழந்தைகள் பலி
இந்த நிலச்சரிவால் பள்ளி குழந்தைகள் துடிக்க துடிக்க உயிர் இழந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரின் நிலையும் தெரியாத காரணத்தால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூலம் குழந்தைகளின் அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தில் 9 பேர், 15 பேர் இறந்த தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி, தங்கை என மொத்தமாக 40 பேரின் உயிரை பறித்து சென்றுள்ளது நிலச்சரிவு. இந்த 40 பேர் உயிர் இழப்பு தொடர்பாக முண்டக்கை பகுதியில் டைலர் கடை நடந்தி வரும் நாசர் கண்ணீர் மல்க கூறுகையில்,
ஒரே குடும்பத்தில் 40 பேர் பலி
கடந்த 29ஆம் தேதி தொடங்கிய மழை 30ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வேகமெடுத்தது. அப்போது எனது வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதனால் தூக்கத்தில் இருந்த எழுந்த உடன் வீடுகளுக்குள் வந்த தண்ணீரை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவது எனக்கு உணர்த்தியது. எனவே உடனடியாக எனது மனைவி மற்றும் குழந்தைகளை தூக்கதில் இருந்து எழுப்பி அருகில் உள்ள மலை மீது உள்ள ஓய்வு விடுதிக்கு கூட்டி சென்றுவிட்டேன்.
Wayanad Landslide rescue
நடந்தது என்ன.?
அடுத்த ஒரு சில நிமிடங்களில் பயங்கர சத்தத்தோடு நிலச்சரிவு ஏற்பட்டது. சில மணி நேரம் கழிந்து வந்த அந்த இடத்தை பார்த்த போது எனது வீடும் இல்லை, அருகில் வசித்து வந்த எனது சகோதர, சகோதரி குடும்பத்தினர் என மொத்தமாக 40 பேரை காணவில்லை. அந்த பகுதியில் இருந்த அனைத்து வீடுகளும் தரைமட்டமாகியிருந்தது. தற்போது வரை 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக நாசர் தெரிவித்தார். இதே போல வயநாட்டில் பல இடங்களில் தங்களது சொந்தங்களை இழந்து பலர் தவித்து வருகின்றனர்.