இந்த 4 உணவுகளை இரும்பு சட்டியில் சமைக்கவே ஒரு போதும் சமைச்சுடாதீங்க! காரணம் இதுதான்!!
Iron Kadhai : இரும்பு சட்டியில் சமைக்க கூடாத உணவுகள் என்ன.. அதற்கான காரணம் என்ன என்பதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
இரும்பு சட்டியில் சமைக்கப்படும் உணவு சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக, இரும்பு சட்டியில் சமைத்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
குறிப்பாக, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சட்டியில் சமைத்த உணவை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இரும்பு சட்டியில் சில உணவுகளை சமைத்தால் அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.
புளிப்பு உணவுகள் : புளிப்பு உணவுகள் இரும்புடன் வினைபுரிவதால், இரும்பு பாத்திரத்தில் ஒருபோதும் புளிப்பான உணவுகளை சமைக்க வேண்டாம். இது ஆபத்தானது அல்ல என்றாலும், உணவின் சுவை உலகம் போல் இருக்கும்.
பச்சை இலை காய்கறிகள் : பச்சை இலை காய்கறிகளை இரும்பு சட்டியில் சமைக்கும் போது அவற்றின் நிறம் கருப்பாக மாறும். காரணம், பச்சை காய்கறியில் இரும்பு சத்து இருப்பதால், இரும்புடன் கலந்து கருப்பாக மாறிவிடுகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பச்சை இலை காய்கறிகளை ஒருபோதும் இரும்பு சட்டியில் சமைக்க வேண்டாம்.
இதையும் படிங்க: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாமா? திராட்சையா? எதை சாப்பிட்டால் நல்லது?
மீன் மற்றும் முட்டை மீன் முட்டை ஆகியவற்றை ஒருபோதும் இரும்பு சட்டியில் சமைக்க கூடாது. காரணம், இவற்றை நீங்கள் சமைக்கும்போது பயன்படுத்தும் எண்ணெயானது இரும்பு சட்டியில் ஒட்டிக் கொள்ளும். இதனால் கழுவுவதற்கு கடினம் மற்றும் சுவையும் மாறிவிடும்.
இதையும் படிங்க: சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க.. ICMR ஆய்வாளர்கள் எச்சரிக்கை..
இனிப்பு உணவுகள் : இனிப்பு உணவுகளை இரும்பு சட்டியில் சமைத்தால் அவற்றின் வாசனை எவ்வளவுதான் கழுவினாலும் போகாது. அப்படியே அதில் இருக்கும். அதுபோல அதன் சுவையும் கெட்டுப் போய்விடும்.