Thalapathy 68: லியோவை மிஞ்சிய 'தளபதி 68' காஸ்டிங்! ஒன்று கூடும் 20 பிரபலங்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம்!
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி 68, படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது.
Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் இணைத்துள்ளனர்.
லியோ படத்திற்கு பின்னர் தளபதி நடிக்கும் 'தளபதி 68' படத்தை சர்வதேச தரத்தில் வருவாக்கி வருகிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.
மிக முக்கியமான வேடத்தில் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் மோகன் முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்திற்காக மோகன், இதுவரை எந்த படத்திற்கும் வாங்காத மிகப்பெரிய தொகையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், சினேகா மற்றும் லைலா சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தளபதி விஜய் வெங்கட் பிரபுவை சேர்த்து, மொத்தம் 20 நட்சத்திரங்களில் கூட்டணியில் உருவாகும் இந்த படம், லியோ காஸ்டிங்கையே பீட் செய்து விட்டதாக தளபதியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். மேலும் தளபதி 68 திரைப்படத்தை 2024-ம் ஆண்டு கோடி விடுமுறையி .
முழு வீச்சில் தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தளபதி 68 திரைப்படத்தை 2024-ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.