சென்னையில் இருந்து செல்லும் 18 ரயில்கள் திடீர் ரத்து.! காரணம் என்ன.?
ஆந்திராவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா வழியாகச் செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலிமார் கோரமண்டல், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திராவில் கன மழை
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் புகுந்துள்ளது. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பல ரயில் நிலையங்களில் தண்டாவாளங்கள் காணமுடியாத நிலை உள்ளது. இதனையடுத்து ஆந்திரா தெலுங்கானா வழியாக புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து
அந்த வகையில் நேற்றிரவு முதல் வருகிற 6ஆம் தேதி வரையிலான ரயில்களின் சேவைகளில் 18 சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துளது. இன்று மட்டும் 8 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் இதில் சாலிமார் கோரமண்டல், சார்மினார் எக்ஸ்பிரஸ், கோர்பா எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பூரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட இருந்த ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல வருகிற 3ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட இருந்த ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து சாலிமார்க்கு இயக்கப்பட இருந்து ரயில் சேவையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல சாலிமாரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட இருந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்மினார் ரயில் ரத்து
இன்று இயக்கப்படவிருந்த ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சென்னை சென்ட்ரல் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த கிராண்ட் டிராங் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தின் தரம் மோசமா.!! ஆளுநர் ரவிக்கு எதிராக களம் இறங்கிய நெட்டிசன்கள்
டெல்லி ரயில் சேவை ரத்து
இதேபோல 4ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட இருந்த கிராண்ட டிராங் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சேவையும் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது