அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சொத்து விவரங்கள் சமர்பிக்காவிட்டால் இந்த மாதம் சம்பளம் கிடையாது! முதல்வர் அதிரடி!
சொத்துப் பட்டியல் தாக்கல் செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என முதல்வர் அறிவித்துள்ளார்.
Government Employee
உத்தரப்பிரதேசத்தில் 17.88 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் ஊழலில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக அனைவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை அரசின் மாநவ் சம்பதா [Manav Sampada] இணையத்தில் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
Asset Declaration
இதையடுத்து இக்காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்திருந்தது. அப்படி இருந்தும் இதுவரை வெறும் 26 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை அறிவித்து உள்ளனர்.
Yogi Adityanath
இந்நிலையில் இந்த மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் கிடையாது என்று முதல்வர் யோகி ஆதித்தியநாத் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Government Employee Salary
உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர். இதுவரை 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளனர். இன்னும் 13 லட்சம் பேர் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத ஊழியர்கள் சம்பளத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.