- Home
- Gallery
- இன்றைக்கு 15ம் தேதி.. குடும்பத் தலைவிகள் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வந்துடுச்சா பாருங்க..!
இன்றைக்கு 15ம் தேதி.. குடும்பத் தலைவிகள் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வந்துடுச்சா பாருங்க..!
மாதந்தோறும் 15ம் தேதி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இன்று காலையிலேயே அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Magalir urimai thogai
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
CM Stalin
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Tamilnadu government
இந்த திட்டத்தில் ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
kalaignar magalir urimai thogai
கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதிக்கு முன்னரே பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் அறிவிக்கப்பட்டபோது கூறியபடி 15-ம் தேதி சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.