நடிகை சமந்தா தனது குடும்படுத்துடன் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஐதராபாத்தில் குடியேறிய சமந்தா திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. தமிழில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் படுக்கை அறையில் ஆபாசமாக நடித்து இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. நாக சைதன்யா மற்றும் மாமனார் நாகார்ஜுனா, மாமியார் நடிகை அமலா ஆகியோருடன் சமந்தா ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு கடற்கரையிலும் நீச்சல் குளத்திலும் அரைகுறை உடையில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
நாகார்ஜுனா தனது 60-வது பிறந்தநாளை ஸ்பெயினில் கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியிலும் கவர்ச்சி உடையில் பங்கேற்றார். இந்த படங்களை பார்த்து இணையதளவாசிகள் கொதிப்படைந்து சமந்தாவை கடுமையாக சாடி வருகிறார்கள். “வெளிநாடு சென்றாலே உங்கள் உடம்பில் உடையே நிற்பதில்லை.

தமிழ்நாட்டு கலாசாரத்தை காற்றில் பறக்க விடுகிறீர்களே? திருமணமான நடிகைகள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். கவர்ச்சி படங்களை வெட்கமில்லாமல் வலைத்தளத்தில் வெளியிடுகிறீர்களே? உங்களுக்கு திருமணம் ஆனதே மறந்து விட்டதா? ஆடையை குறைத்து சுதந்திரத்தை காட்ட வேண்டாம்” என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

ரோஸ் கலரில் நீச்சல் குளமருகே ஒய்யார நடை..

கணவருடன் நெருக்கமாக...